தெளிவு

கடவுள்
இருக்கிறானா
இல்லையாயென
குழம்பி நின்றேன்

மென் தென்றல்
மேகம் தீண்டியது

மழைச் சாரல்
மழலையைத் தீண்டியது

கடவுளைக் கண்டேன்
கள்ளமிலா மழலைச் சிரிப்பில்

அடியோடு அடிமையானேன்
உள்ளமெலாம் அவன் பிடியில்.