புலம்பல்


விடிவுக்கு இன்னும் கொஞ்ச நேரம்
விடிவெள்ளியோ கைக்கு வெகு தூரம்
நினைவுகள் தாங்கி இன்னுமொரு வாரம்
கால்கள் பயணிக்கட்டுமின்னும் கொஞ்ச தூரம்.

அடிமனதில் அகலாத ஏதேதோ காயம்
அது வெளுக்கட்டுமே கொஞ்சம் சாயம்
கடுங்கோபத்தில் யாரெனக்கு கொடுத்ததிந்த சாபம்?
மனிதனாய் பிறந்ததே மிகப்பெரும் பாவம்.

திசைத் தேடி பயணிக்கா நதியே!
நீயாய் நானில்லாதது கடவுளின் சதியே;
என்றாவது மாறுமா இந்த விதி?!
அதுவரை என்னவாகும் என் கதி?

வண்ணமலர் தூவி கொஞ்சும் மரமே!
வந்துக் கொடு கொஞ்சம் உந்தன் கரமே;
கூடவே துணையிரு கொஞ்சக் கணமே
குறையட்டும் நெஞ்சில் இருக்கிற கனமே.