தவறு

மழைத் தரா மேகமே..!
நீ மலடாய் கிடப்பது
உன் தவறல்ல;
என் தவறு

நிழல் தரா மரமே..!
நீ நிர்வாணமாய் கிடப்பது
உன் தவறல்ல;
என் தவறு

தென்றல் தராக் கீற்றே..!
நீ திக்கற்று கிடப்பது
உன் தவறல்ல;
என் தவறு

இசைப் படிக்கா குயிலே..!
நீ ஊமையாய் கிடப்பது
உன் தவறல்ல;
என் தவறு

நடனம் பயிலா மயிலே..!
நீ ஊனமாய் கிடப்பது
உன் தவறல்ல;
என் தவறு

என் தவறென்றால்
என் தவறேயல்ல;
இந்தப் பொல்லாத
மானுடத்தின் தவறு.