போதைப் பொருள்

நான்
கடைத்தெருவில்
நின்றுக் கொண்டிருந்தேன்

“உங்களைக்
கைது செய்கிறோம்
என்றது காவல்துறை

“ஏன்?
எனக் கேட்டேன்

“போதைப் பொருள்
விற்பது குற்றம்“ என்றது

“நான் எப்போது
போதைப் பொருள் விற்றேன்?“
என்றேன் நான்

“கையிலிருப்பது என்ன?“
என்றது

“கவிதைகள்“
என்றேன்

“ஆம்,
அதற்குத்தான் கைது செய்கிறோம்;
கவிதைகள்தான்
உலகின் உச்சபட்ச போதைப்பொருள்“
என்றது காவல்துறை

நானொன்றும் பேசவில்லை;
சிறைக்குச் செல்லத் தயாரானேன்

சட்டம்
தன் கடமையைச் செய்தது.