புவி ஈர்ப்பு விசை, இயற்கையின் நான்கு அடிப்படை விசைகளில் மிகவும் வலுக்குன்றிய விசையாகும். அகிலத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் அல்லது துகளும் ஒன்றையொன்று கவர்ந்து இழுக்கும் தன்மைக் கொண்ட்து. இருபொருட்களுக்கு இடையேயான ஈர்ப்பு விசையானது, அந்த பொருட்களின் நிறைகளின் (எடைகளின்) பெருக்கற்பலனுக்கு நேர்தகவிலும், தொலைவின் இருமடங்கிற்கு எதிர்தகவிலும் இருக்கும்.
F - இரண்டு பொருட்களுக்கு இடையேயுள்ள ஈர்ப்புவிசை (நியூட்டன்)
m1,
m2 - இரண்டு பொருட்களின் நிறை (கிலோகிராம்)
r - இரண்டு பொருட்களுக்கும் இடையேயுள்ள தொலைவு (மீட்டர்)
G – ஈர்ப்பு மாறிலி (நியூட்டன் கிலோகிராம்-2 மீட்டர்2)
நியூட்டன், ஆப்பிள் தோட்டத்திலிருக்கும்போது மரத்திலிந்து ஆப்பிள் விழ, பூமிக்கு ஈர்ப்புவிசை உள்ளதெனக் கண்டறிந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், நம் கேள்வி என்னவென்றால் பூமி ஏன் ஆப்பிள் மீது விழவில்லை? என்பதே. எளிமையாக புரிந்துக் கொள்ள இரண்டு காந்தங்களை எடுத்துக் கொள்வோம். ஒன்றின் எடை 100 கிலோகிராம் எனவும், மற்றொன்றின் எடை 10 கிலோகிராம் எனவும் வைத்துக் கொள்வோம். இரண்டையும் 5 மீட்டர் தொலைவில் வைக்கும்போது, ஒன்றையொன்று குறைவாகவும், அதே 1 மீட்டர் தொலைவில் வைக்கும்போது அதிகமாகவும் ஈர்க்கும். 100 கி.கி எடையுள்ள காந்தத்தை நிலையாக வைத்துக் கொண்டு, 10 கி.கி காந்தத்தை மட்டும் எதிர்திசையில் நகர்த்தினால், 100 கி.கி காந்தத்தின் நிலையில் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால், 10 கி.கி காந்தத்தை நிலையாக வைத்துக் கொண்டு, 100 கி.கி காந்தத்தை எதிர்திசையில் நகர்த்தும்போது, 10 கி.கி காந்தமானது 100 கி.கி காந்தம் எந்த திசையில் நகருகிறதோ அதே திசையில் நகரும். இதிலிருந்து நாம் அறிவது என்னவெனில் காந்தத்தின் எடை அதிகரிக்கும்போது, அதன் ஈர்ப்பு விசையும் அதிகமாகும் என்பதாகும். 100 கி.கி காந்தமானது 10 கி.கி காந்தத்தைவிட வலிமைமிக்கது. எனவே, 100 கி.கி காந்தத்தால் எளிதாக 10 கி.கி காந்ததை தன்னை நோக்கி ஈர்க்க முடியும். ஆனால், 10 கி.கி காந்தத்தால், 100 கி.கி காந்ததை ஈர்க்க முடியாது.
இப்போது பூமி, ஆப்பிள் கதைக்கு வருவோம். பூமியின் எடை மதிப்பு தோராயமாக 6 x 1024 கிலோகிராம் (6000000000000000000000000000 கிராம்). ஆனால், ஆப்பிளின் எடை தோராயமாக வெறும் 200 கிராம். பூமியின் எடையோடு ஒப்பிடும்போது ஆப்பிளின் எடை மிக மிக மிக மிக மிகக் குறைவு. ஆதலால், பூமி அதிக வலிமையோடு ஈர்ப்பதால் ஆப்பிள் பூமியின்மீது விழுகிறது. பூமி, ஆப்பிளின் மீது விழ வேண்டுமாயின் ஆப்பிளின் எடையை பூமியின் எடையைவிட அதிகமான எடைக் கொண்டதாக உருவாக்க வேண்டும். அப்படி மிகப்பெரிய ஆப்பிளை உருவாக்கினால் பூமியின் ஈர்ப்புவிசையைவிட, ஆப்பிளின் ஈர்ப்புவிசை அதிகமாக இருக்கும். அப்போது, பூமி மீது ஆப்பிள் விழுவதற்கு பதிலாக ஆப்பிள் மீது பூமி விழும்.
குறிப்பு;
புரிதலுக்காக நிறைக்கு பதிலாக எடை என
பயன்படுத்தப்பட்டுள்ளது. எடையும், நிறையும் வேறு.