The Compound Effect - (Tamil)



#1. உடனடியாக 30 கோடி ரூபாய்
#2. தினமும் இரட்டிப்பாகும் 1 ரூபாய்

இரண்டில் எதாவது ஒன்றைக் கேள்என கடவுள் உங்கள் முன் தோன்றி, உங்களின் ஒரு மாத செலவுக்காக வரம் கொடுத்தால் நீங்கள் எதை கேட்பீர்கள்?. தேர்வு செய்துவிட்டீர்கள் என்றால் உங்களின் பதிலை, உங்கள் மிகச்சிறந்த மூளையின் எதாவதொரு பகுதியில் பத்திரமாக பதுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு முன்பாக சில விசயங்களை பேசுவோம்.

முயல், ஆமை கதையைக் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நான்தான் அந்த ஆமை. எனக்கு போதிய நேரத்தை மட்டும் கொடுங்கள். யாரை வேண்டுமானலும் எதை வேண்டுமானலும் என்னிடமுள்ள, நான் வளர்த்துக் கொண்ட நேர்மறையான பழக்கவழக்கங்களைப் பயன்படுத்தி வென்றுக் காட்டுகிறேன். இந்த உலகிலேயே அதிக நிலைப்புத் தன்மைக் (Consistency) கொண்டவன் நான்தான் என தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் “The Compound Effect” என்ற புத்தகத்தின் எழுத்தாளர் டேரன் ஹார்டி (Darren Hardy) .

சிறு சிறு புத்திசாலித்தனமான தேர்வுகள் + நிலைப்புத் தன்மையோடு தொடர்தல் + காலம் = மிகப்பெரிய மாற்றம்இதுவே இந்த புத்தகத்தின் அடிநாதம். சிறு சிறு புத்திசாலித்தனமான தேர்வுகளிலிருந்து, மிகப்பெரிய வெகுமதிகளை வென்றெடுப்பது எப்படி? என்பதற்கான வழியினைச் சொல்கிறது.

1 ரூபாய், 30 கோடி ரூபாய் பிரச்சனைக்கு வருவோம். நீங்கள் 30 கோடி ரூபாயைத் தேர்ந்தெடுத்து இருந்தால், நீங்கள் அறிவாளி. அந்தப் பணம் உங்களுக்குச் சொந்தம். அதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் 31 நாட்களுக்கு, அதாவது ஒரு மாதத்திற்கு செலவு செய்யலாம், அது உங்களின் விருப்பம்.

ஆனால், நீங்கள் 1 ரூபாயைத் தேர்ந்தெடுத்து இருந்தால், அந்த 30 கோடி உங்களுக்கு சொந்தமில்லை. கிட்டத்தட்ட 108 கோடி ரூபாய், 31-வது நாளின் முடிவில் சொந்தம். அதிர்ச்சியடைய வேண்டாம், எப்படி என்றுப் பார்ப்போம். நீங்கள் தேர்வு செய்த 1 ரூபாய், தினமும் இரட்டிப்பாகிக் கொண்டேயிருக்கும், ஆமாம்தானே..?!.

1-வது நாள் = 1 ரூபாய்
2-வது நாள் = (1+1) = 2 ரூபாய்
3-வது நாள் = (2+2) = 4 ரூபாய்
4-வது நாள் = (4+4) = 8 ரூபாய்
5-வது நாள் = (8+8) = 16 ரூபாய்
10-வது நாள் = (256+256) = 1,024 ரூபாய்
15-வது நாள் = (8196+8196) = 16,384 ரூபாய்
20-வது நாள் = (262144+262144) = 524,288 ரூபாய்
25-வது நாள் = (8388608+8388608) = 16,777,216 ரூபாய்
30-வது நாள் = (268435456+268435456) = 536,870,912 ரூபாய்
31-வது நாள் = (536870912+536870912) = 1,073,741,824 ரூபாய்

31-வது நாளின் முடிவில் 107 கோடியே 37 இலட்சத்து 41 ஆயிரத்து 824 ரூபாய் உங்களுக்குச் சொந்தம். இதன்மூலமாக டேரன் ஹார்டி நமக்கு சொல்ல வருவது என்னவெனில், நம் சக்திக்கு மீறிய பெரியப் பெரிய தேர்வுகள் அல்லது முடிவுகள் எடுப்பதற்க்குப் பதிலாக, நம்மால் மிகவும் எளிதாக, தொடர்ந்து செய்கிற மாதிரியான சிறு சிறு புத்திசாலித்தனமான தேர்வுகளைச் செய்யுங்கள் என்கிறார். நம் எல்லோரிடமும் அந்த 1 ரூபாய் இருக்கிறது. அதை நாம்தான் 107.38 கோடிகளாக மாற்ற வேண்டும். மாற்றுவோம், தொடர்ந்து மாற்றத்தை நோக்கி பயணிப்போம்.

Small, Smart Choices + Consistency + Time = Radical Difference

இங்கு நாம் பேசியது இந்தப் புத்தகத்தின் சில பக்கங்கள் மட்டுமே. முழுமையாக படிக்க எண்ணுகிறவர்களுக்காக இப்புத்தகத்தின் மின்னூல் சுட்டி இங்கே பகிரப்படுகிறது.
Web link: