விட்டில் பூச்சி

காதலே,
இன்னும் இன்னும்
எத்தனை கோடிமுறை
என்னிதயத்தைக கிழிக்கப் போகிறாய்?

காலந்தோறும் என்னை
காயப்படுத்தி கலங்கடிப்பதில்
உனக்கேன் வ்வளவு ஆனந்தம்?

சிரி,
நன்றாக சிரித்து
மனமாற மகிழ்ந்துக்கொள்
ஆனால்,
கொஞ்சம் சிரிப்பினை
சேர்த்து வைத்துக்கொள்

அடுத்தமுறையும் தோற்பேன்
அப்போது எங்கேப் போவாய்
மொத்தமாய் செலவழித்துவிட்ட
சிரிப்பினைக் கடன் வாங்க?

ஆதலால்,
கொஞ்சம் சிரிப்பினை
சேர்த்து வைத்துக்கொள்

நான் தோற்பதே
உனக்கு சுகமென்றால்
உன்னை சுகப்படுத்துவதே
சுகம் எனக்கு.

சுடும் விளக்கின்
சுடரினைத் தீண்டும்
விட்டில் பூச்சியாய்
நீயென்னை சுட்டாலும்
மீண்டும் வருவேன்

மீண்டெழுந்து வந்து
மீண்டும் தொடர்வேன்.