நீயே ஆனந்தத்தின் எல்லை


இரும்பு இதயத்தவனை
உந்தன் காந்தவிழியில்
கவர்ந்து இழுக்க
காலடி சேர்ந்தேன்
தூண்டில் மீனாக்கினாய்

சிறையெடுக்கும் உந்தன்
சிறுப்பிள்ளைச் சிரிப்பினை
இன்னுமருகில் தரிசிக்க
ஆனந்தமாய் வந்தேன்
ஆயுள் கைதியாக்கினாய்

தட்டைத் துழாவும்
குருட்டு யாசகனாய்
உன்னுடலை ஒவ்வொரு
அங்குலமாய் துழாவினேன்
மென்பரிசத்தில் மூழ்கடித்தாய்

உணர்ச்சிப் பொங்க
உடல் திரவத்தில்
உயிரைக் கரைத்து
உன்மீது ஊற்றினேன்
அன்பால் கட்டியணைத்தாய்

இளமைக் கரைத்து
முதுமையில் முடிகிற
வாழ்வின் வரம்
எதுவென கேட்டேன்
மழலையை கருவாக்கினாய்
மகிழ்ச்சியை பொருளாக்கினாய்

அடடா..!
இதுவே இன்பம்
நீயே பரிபூரணத்தின் ஆனந்தம்
நீயே ஆனந்தத்தின் பரிபூரணம்.


#கடவுள்