நிலவின் மறுபக்க இரகசியம் !


நிலவின் முதுகும்
பெண்ணின் மனதும்
என்றும் இரகசியம்தானா?”
பெண்ணின் மனது, உலகத்தில் முதல் உயிர் தோன்றிய காலத்திலிருந்து, கடைசி உயிர் மறைந்துப் போகும் காலம்வரை என்றுமே இரகசியம்தான். அந்த இரகசியத்தை அறிய முற்பட்டால், தொழில்நுட்பமும் தோற்றுப் போகும். அதில் யாருக்குமே எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையவே கிடையாது. கடவுளைக்கூட என்றைக்காவது கண்டுவிடலாம். ஆனால், பெண்ணின் மனதை எவராலும் கண்டுவிட முடியாதென்பதற்கு தினந்தோறும் மனைவியிடம் அடிவாங்கும் கணவன்மார்களே சாட்சி. அதெப்படியோ போகட்டும், நாம் நிலவின் முதுகை ஆராய்வோம்.

ஒரு சுற்றுவட்டம் என்பது 360 டிகிரி ஆகும். நிலவானது ஒருமுறை பூமியை சுற்றிவர ஒரு நாளைக்கு சராசரியாக 13.177 டிகிரி கோணத்தை கடக்கிறது. அப்படியானால், முழுமையாக ஒரு சுற்றுவட்டத்தைச் சுற்றிவர 27.32 நாட்கள் (360/13.177=27.320) ஆகிறது. நிலவானது தன்னைத் தானே சுற்றிக்கொள்ள ஒரு நாளைக்கு 13.33 டிகிரி கோணத்தை கடக்கிறது. அப்படியானால், தன்னைத் தானே ஒருமுறைச் சுற்றிக் கொள்ள 27 நாட்கள் (360/13.33=27) ஆகிறது. நிலவானது பூமியை ஒருமுறை சுற்றிவர ஆகிற நாட்களும், தன்னைத் தானே சுற்றிக்கொள்ள ஆகிற நாட்களும் ஏறத்தாழ இரண்டுமே சமம். இதுதான் நிலவின் மறுபக்கத்தை பூமியிலிருந்து பார்க்க முடியாததற்கு காரணமாகும்

சாதாரணமாக ஒரு பொருள் தன்னைத் தானே சுற்றிக் கொள்ளாமல் பூமியைச் சுற்றிவருகிறதென்றால், அதன் எல்லாப் பக்கங்களையும் நம்மால் காண முடியும். ஆனால், தன்னைத்தானேச் சுற்றிக் கொண்டும் பூமியையும் சுற்றிவருகிறதென்றால், அதன் ஒரு பகுதியை மட்டுமே நம்மால் காண முடியும். ஏனெனில், தன்னைத் தானே சுற்றிக் கொள்ளாதபோது, முழுமையாக பூமியின் கட்டுப்பாட்டில் இயங்கும். தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும்போது பூமிக்கு எதிர்வினையாக செயல்பட்டு, பூமியின் முழுமையான கட்டுப்பாட்டில் இல்லாமல் போகும். 



     1) இடது : நிலவானது தன்னைத் தானேச் சுற்றிக் கொண்டு, பூமியைச் சுற்றிவரும்போது 
     2) வலது : நிலவானது தன்னைத் தானேச் சுற்றாமல், பூமியை மட்டும் சுற்றிவரும்போது

பூமி, தன்னுடைய ஈர்ப்புவிசையால் நிலவை அனைத்து பக்கங்களிலும் சுழற்ற முயலுகிறபோது, நிலவின் ஈர்ப்புவிசையானது எதிர்வினையாக செயல்படுகிறது. எனவே, நிலவானது தன் பழைய நிலையை மீண்டும் மீண்டும் தக்கவைக்க தொடர்ச்சியாக முயன்றுக் கொண்டேயிருக்கும். அதனால், நம்மால் நிலவின் 59 சதவீத பகுதியை மட்டுமே பார்க்க முடியும். மீதமுள்ள 41 சதவீத பகுதியை பூமியிலிருந்து நம்மால் பார்க்க முடியாது. இன்னும் கொஞ்சம் தெளிவான விளக்கத்திற்கு கீழேயுள்ள இந்த காணொளியைப் பாருங்கள்.



3 கருத்துகள்:

  1. Excellent.. # Physicist may found the secret behind moon but never can find the secret behind women..👸😜

    பதிலளிநீக்கு
  2. முகத்தை காட்டுகிறது நிலவு
    நம் முகம் பிரகாசிக்க
    அந்த இரவில்
    நிலவிடம் பேசினேன்
    உன் மறுபக்கம் நான் காண வேண்டும் என்றேன்
    நிலவு சொன்னது
    நான் ஒளிரும் வரைதான்
    நீ என்னை காதலிப்பாய் என்றாது
    ஏன் பொய் சொல்கிறாய் என்றேன்
    அதற்கு சொன்னது
    நான் ஒளிர்வதால் தான்
    என் முதுகை நீ தேடுகிறாய் என்றது





    பதிலளிநீக்கு