புல்வாமா

பிரசவிக்கும் முன்னே
பிடித்திழுத்துக் கழுத்து
நெரித்தக் கருவென
துடிக்கிறேன்

மொட்டுஅவிழும் முன்னே
மொத்தக் காற்றும்
தாக்கிய மலரென
உதிர்கிறேன்

கடலலையில் கால்
நனைக்கும் முன்னே
காலொடிந்த நொண்டியென
கதறுகிறேன்

பால்வீதி நோக்கி
பறக்கும் முன்னே
சிறகொடிந்தப் பறவையென
பரிதவிக்கிறேன்

மரணத்தை
வரிசையில் நின்று
முன்பதிவு செய்தேன்

காலனுக்காகவே
காலம் முழுக்க
காத்துக் கிடந்தேன்

எந்த நொடியிலும்
இறந்திடவே பிறந்தேன்
இருந்தும், ஏன் அழுகிறேன்?

என்ன...?
கேட்கவில்லை,
சத்தமாய் சொல்லுங்கள்

இறப்பைக்
கண்டுப் பயப்படுகிறேனா?
பயமா...? எனக்கா...?

ஆம், பயம்தான்
நான் போனப்பின்
நாட்டை யார் காப்பாற்றுவார்?

#PulwamaAttack
#IndianArmy