முதுமைக் கிளவி


அழகெலாம் பழுத்து நரைத்து
இளமையற கூடாகும் பொழுதிலும்
நீ நான் பேதமற
நீங்காதிரு கண்மணியே..!

கண்ணொளி கரைந்து மறைந்து
வண்ணமற கருகும் பொழுதிலும்
நீ நான் பேதமற
நீங்காதிரு கண்மணியே..!

அணுவளவு பொசுங்கி சுருங்கி
ஆயுளற புதையும் பொழுதிலும்
நீ நான் பேதமற
நீங்காதிரு கண்மணியே..!

தேகமெலாம் சுணுங்கி கசங்கி
உளமற வருந்தும் பொழுதிலும்
நீ நான் பேதமற
நீங்காதிரு கண்மணியே..!

கால்கள் மூன்றாகி நான்காகி
காலமற கலங்கும் பொழுதிலும்
நீ நான் பேதமற
நீங்காதிரு கண்மணியே..!

கிழவியாகும்வரை கிழவனோடு இரு
கிழவியானாலும் கிளவியாய் இரு..!