மாசற்ற மனிதம்

கார்மேகம் மோதி
கருமேகத்திற்கு விபத்து

உதவிட யாருமின்றி
உதிரம் முழுவது‌ம்
உடைந்து உருகி
ஒவ்வொரு துளியாய்
உலகெலாம் வழிகிறது

யார் இறந்தால்
எனக்கு என்னவென
உற்சாகத்தின் உச்சியில்
ஒரு கவலையுமின்றி
உயிர்களலெலாம் நகர்கிறது

மின்னளொளி வெளிச்சத்தில்
மீண்டுமொருமுறைத் தேடியும்
மனிதம் நிறைந்தவொரு
மாசற்ற மனிதரையும்
மண்ணில் காணோம்

புவியில் வாழ்ந்த மனிதன்
புலம் பெயர்ந்தது எங்கேவென
புதியதொரு கிரகத்தில் தேடியும்
அங்கேயும் மிஞ்சியது ஏமாற்றம்
அழுது தீர்த்தது மழைமேகம்.