சொந்தம்

மலரினுள்
மலர்கிற தேன்
யாருக்கு சொந்தம்?
மலருக்கா? தேனீக்கா?

மழலை
சிந்துகிற புன்னகை
யாருக்கு சொந்தம்?
இதழ்களுக்கா? கண்களுக்கா?

முதுமை
அளிக்கிற அனுபவம்
யாருக்கு சொந்தம்?
வாழ்க்கைக்கா? வயதுக்கா?

தென்றல்
தருகிற மென்பரிசம்
யாருக்கு சொந்தம்?
காற்றுக்கா? மரத்துக்கா?

கவிதை
தருகிற ஆனந்தம்
யாருக்கு சொந்தம்?
கவிஞனுக்கா? கற்பனைக்கா?

சொந்தமென
சொந்தம் கொண்டாட-அற்ப
சொற்கள்கூட இல்லை

சொல்லிவிட்ட
அடுத்த நொடியில்-அதுவும்
அடுத்தவர் சொந்தம்.