சர்வம்

உந்தன் ஆதியே
எந்தன் ஆதி..!

எந்தன் அந்தமே
உந்தன் அந்தம்..!

புவிக் கண்ணில்
பார்த்தால் வானம் உயரம்,
வானக் கண்ணில்
பார்த்தால் எது உயரம்..?

வாமனமும் ஒன்றுதான்
விஸ்வரூபமும் ஒன்றுதான்
இதிலென்னே மேலே கீழே..?

அரையடியாய் இருந்தாலும்
ஆறடியாய் இருந்தாலும்
அடக்கம் மண்ணிலே,
அது புரியாமல்
ஆடுவதேன் இடையிலே..?

கர்வம் நீங்கினால்
சர்வமும் சமமே.