தீபம்

மறுகணம் இறப்பதில்
வலியும் இல்லை
மாயாது கிடப்பதில்
பயனும் இல்லை

தீ திண்பதில்
வருத்தமும் இல்லை
தீ திண்டாது
வாழ்க்கையும் இல்லை

தீக்குச்சிகளாய்
பிறந்து விட்டோம்
தீப்பெட்டியினுள்ளேயே
கிடந்தென்ன பயன்?!

தீத்தந்து – அதே
தீயில் வெந்து
மண்ணோடு மரணித்து
மண்ணாவதில் பயமுமில்லை

மாறாக,
தீபமாகிறேனா?
தீயவனாகிறேனா?
அதுவே பயம்.