ஜீரோ (Zero)


நாம் எல்லோருமே ஒரே மாதிரியான உயிரணுவிலிருந்துதான் பிறக்கிறோம். ஆனால், ஒரே மாதிரியாக பிறப்பதுமில்லை, வளர்வதுமில்லை. சிலர் பெரும் தலைவர்களாகி, மக்களிடையே மாற்றத்தை உண்டாக்கி, காலம் கடந்தும் வாழ்கிறார்கள். மற்றவர்களோ நடுத்தரமான மனிதர்களாக வாழ்ந்து, வந்தோம் சென்றோமென மறைகிறார்கள். ஆனால், சிலருக்கோ எவ்வித வாய்ப்புகளுமின்றி எந்தப் பாதையில் செல்வதென தெரியாமல் அன்றாட வாழ்வே மிகப்பெரிய போர்க்களமாகிறது என பின்னணி குரலொலிக்க காட்சிகளாக மலர்கிறது ஜீரோ (Zero) குறும்படம்.

               புதியதொரு உலகம். அங்கே எண்களின் மதிப்பை வைத்தே அவர்களின் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட சமூகத்தில், இடி முழக்கத்தின் நடுவே பிறக்கிறது ஒரு குழந்தை. அதன் நெஞ்சில்ஜீரோஎன இருக்கிறது. அதைக் கண்டதும் அதிர்ச்சியடைகிறாள் பிரசவம் பார்த்த செவிலி. அந்த குழந்தை அனாதையாக தெருவில் கைவிடப்படுகிறது. எண்ணமுடியா இன்னல்களுக்கு ஆளாகிறது. இருப்பினும், யாருடைய சீண்டல்களையும் பொருட்படுத்தாமல் தன் போக்கிலே வளர்கிறது. தனிமை மட்டுமே சொந்தமென துணை நிற்கிறது

https://adpaytm.com/y6IfVFp

வளர்ந்துப் பெரியவனாகிறான். தன்னைப் போலவே சமூகத்தால் கைவிடப்பட்ட பெண் ஜீரோவைக் காண்கிறான். அவர்களிடையே நட்பு மலர்கிறது. நட்பு காதலாகிறது. மிகவும் சந்தோசமாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது, அவர்களின் வாழ்வில் மீண்டும் விதி விளையாடுகிறது. ஆண் ஜீரோவை செய்யாதக் குற்றத்திற்காக சிறையில் அடைக்கிறார்கள். இருவரும் மீண்டும் தனிமையில் மிகவும் வேதனைப்பட்டு வாடுகிறார்கள்

https://adpaytm.com/y6IfVFp

பல மாதங்கள் கழித்து பெண் ஜீரோ, ஆண் ஜீரோ இருக்கும் சிறையைக் கண்டறிந்துக் காண வருகிறாள். இருவரும் ஒருவரையொருவர் பார்த்ததும் மகிழ்ச்சியின் உச்சத்தை அடைகிறார்கள். ஆண் ஜீரோவிடம், தன் கர்ப்பம் தரித்த வயிற்றினைக் காட்டுகிறது பெண் ஜீரோ. இதைக் கண்ட சமூகம், அவளைக் கேளிப் பேசி துன்புறுத்த முற்படுகிறது. இடறிக் கீழே விழுகிறது பெண் ஜீரோ. அதிர்ச்சியில் அங்கேயே பிரசவ வலி உண்டாகி, குழ்ந்தைப் பிறக்கிறது. பிறந்தக் குழந்தையின் நெஞ்சத்தின் நடுவில்,  முடிவிலி (Infinity) என இருக்கிறது. அதைக் கண்டதும், அனைத்து சமூகமும் தலைவணங்கி நிற்கிறது. ஜீரோக்களின் வாழ்க்கை மீண்டும் மகிழ்ச்சியாகிறது.

https://adpaytm.com/y6IfVFp

வாழ்க்கையில் நாமும் இந்த ஜீரோக்களைப் போலவே நிராகரிக்கப்படுகிறோம், துன்புறுத்தப்படுகிறோம். அதையெல்லாம் பொருட்படுத்தாமல், உங்கள் இலக்கினை நோக்கி முழுமையான கவனத்துடன் ஓடிக்கொண்டே இருங்கள். நீங்கள் யாரென்று, உங்களின் மதிப்பு என்னவென்று, உங்களின் வெற்றிகள் சொல்லட்டும். அப்போது, உங்களை இந்த உலகம் தன் வரலாற்றின் பக்கங்களில் நெடுங்காலத்திற்கு நினைவில் நிறுத்திக் கொள்ளும். அதுவரை தொடர்ந்து ஓடிக்கொண்டே இருங்கள்