இன்னுமொரு பிறவி


இறைவா..!
இன்னுமொரு பிறவியுண்டா?
இருந்தால் நானென்னாவேன்?!

மயிலாகி
மருகனிடம் சேர்வேனோ?
குயிலாகி
காற்றிலிசைக்கும் கீதமாவேனோ?
கிளியாகி
கோமகளின் கிள்ளையாவேனோ?
நாயாகி
நன்றியின் பொருளாவேனோ?
பாம்பாகி
பரமனின் கழுத்தணியாவேனோ?
பசுவாகி
பாமரனின் பசித்தீர்ப்பேனோ?

என்னாவேன்?
சீக்கிரம் சொல்.

ஒருவேளை,
மீண்டும்  மனிதனாவேனோ?

அதுவானால்,
நிச்சயம் மரித்தேப் போவேன்;
இன்னுமொரு
பிறவியேயில்லாத வரம் கேட்பேன்.

#SeHa