புத்தனாசை


புத்தனைப் பற்ற
ஆசைக் கொண்டேன்;
ஆசையை விடுவதே
அவனைப் பற்றும்
வழி என்றனர்

ஆதலால்,
அவனைப் பற்றும்
ஆசையை விட்டேன்;
ஆசையோடு அவனாவி
என்னைப் பற்றியது.