நானில் நானில்லை


நானே கேள்வி
நானே பதில்
என்னை நானே
குழப்பிக் கொள்கிறேன்

நானே தாள்
நானே மையிறகு
என்னை நானே
கிறுக்கிக் கொள்கிறேன்

நானே கல்
நானே கண்ணாடி
என்னை நானே
உடைத்துக் கொள்கிறேன்

நானே முள்
நானே சீலை
என்னை நானே
கிழித்துக் கொள்கிறேன்

நானே கடவுள்
நானே மிருகம்
எனக்குள் நானே
போரிட்டுக் கொள்கிறேன்

நானே இடி
நானே மின்னல்
எனக்குள் நானே
அழுதுக் கொள்கிறேன்

நானே ஆடு
நானே அரிவாள்
என்னை நானே
பலியிட்டுக் கொள்கிறேன்

நானே தீ
நானே விறகு
என்னை நானே
எரித்துக் கொள்கிறேன்

நானில் நானில்லை
நானாகயிருந்தும் நானேயில்லை.